Categories
சினிமா தமிழ் சினிமா

பாட்டியாக மாறிய ”பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகை…. வைரலாகும் புகைப்படம்…..!!!

சுஜிதா வயதான பாட்டி போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் ,இந்த சீரியல் டி.ஆர்.பி.யிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனையடுத்து, இந்த சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது வயதான பாட்டி போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |