Categories
மாநில செய்திகள்

பாட்டாசு ஆலை வெடி விபத்து…. பறிபோன 4 உயிர்…. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…..!!!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் தங்கவேல், கண்ணன், ராமர், ஜெயராஜ் ஆகியோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கோவில்பட்டி வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.  ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அதாவது விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது..

Categories

Tech |