நடிகை வாணி போஜன் நடிகர் பரத்துடன் இணைந்து நடிக்கும் படத்தில் பாடல்களே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை வாணி போஜன். இதையடுத்து இவர் ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் . இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பிரபல நடிகர் பரத் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் பாடல்களே இல்லை என இந்த படத்தின் இயக்குனர் சக்திவேல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது ஒரு திரில் மற்றும் குடும்ப கதையம்சம் கொண்ட படம் என்றும் வாணி போஜன், பரத் ஆகிய இருவருக்கும் சமமான அளவில் முக்கியத்துவம் தரும் வகையில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த படத்தில் துளசி, ராஜ்குமார், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அம்பாசமுத்திரம், தென்காசி, சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.