Categories
சினிமா

பாடலாசிரியர் கபிலன் மகள் தற்கொலை…. என்ன காரணம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பாடலாசிரியர் கபிலன் சென்னையில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார் .இதனிடையே குடும்ப பிரச்சினை காரணமாக கபிலனின் மகள் தூரிகை தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடல் தற்போது தனியார் மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கபிலரின் மகள் தூரிகை ஒரு பிரபல மாத இதழின் எடிட்டராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் திடீரென குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.அவரின் உடலை மீட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.இந்நிலையில் திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |