லதா மங்கேஷ்கரை பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பெருமையாக கூறியுள்ளார்.
லதா மங்கேஷ்கருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சென்ற ஞாயிற்றுக்கிழமை இவர் மறைந்த போது ஏராளமான ரசிகர்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர்.லதா மங்கேஷ்கர் 70 வருடங்களாக சினிமா துறையில் இருந்தார். இவர் 30,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் முப்பத்தி ஆறு மொழிகளில் பாடியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷோயிப் அக்தர் லதா மங்கேஷ்கரின் மிகப்பெரிய ரசிகனாம். இவருக்கு லதா மங்கேஷ்கர் நேரில் பார்க்க வேண்டும் என நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஆனால் இறுதி வரைக்கும் அவரை பார்க்க முடியவில்லையாம். இதனை அவருடைய யூடியூப் சேனலில் தெரிவித்திருக்கிறார்.
மேலும் லதா மங்கேஷ்கரை பற்றி அவர் கூறியதாவது, “நான் ஒரு முறை இந்தியா வந்தபொழுது லதா மங்கேஷ்கர் இடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பேசிய பொழுது நான் லதா ஜி என்று அழைக்க அவர் என்னை ஜி என்று அழைக்காதீர்கள் அம்மா என்று அழையுங்கள் என அவர் கூறியதை என்னால் என்றும் மறக்க முடியாது”. மேலும் லதா மங்கேஷ்கர் கூறியதாவது நீங்களும் சச்சின் டெண்டுல்கரும் விளையாடும்போது கடும் போட்டி இருந்தாலும் கிரவுண்டை விட்டு வெளியே வந்தாள் இருவரும் சாந்தமாக மாறிவிடுகிறீர்கள் என்று லதா மங்கேஷ்கர் சொன்னாராம்”. ஒரு பாகிஸ்தான் வீரர் இந்தியாவைச் சேர்ந்த பாடகியான லதா மங்கேஷ்கருக்கு ரசிகராக இருப்பது அனைவருக்கும் சந்தோசத்தை ஏற்படுத்தியிருக்கிறது.