பா.ஜ.க வின் 2 வேட்பாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க வின் சார்பாக அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கட்சியின் அறிவிப்பை மீறி பா.ஜ.க கட்சியின் 2 வேட்பாளர்கள் அவர்களை எதிர்த்து மறைமுகத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதன் காரணமாக குமரி மாவட்ட பா.ஜ.க கட்சியின் தலைவர் தர்மராஜ் இரணியல் பேரூராட்சியின் 10-வது வார்டு கவுன்சிலர் கீதா என்பவரையும் தெற்கு ஒன்றிய செயலாளர் வினோத் ராஜ் என்பவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்துள்ளார். இவர்கள் 2 பெறவும் கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயல்பட்டதால் நீக்கம் செய்யப்ட்டதாக மாவட்ட தலைவர் கூறியுள்ளார்.