பாஜக கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி காயத்ரி ரகுராமை மாநில தலைவர் அண்ணாமலை 6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளார். இதேபோன்று சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணிடம் ஆபாசமாக பேசியதாக கூறி திருச்சி சிவாவும் கட்சி விழாக்களில் பங்கேற்பதற்கு அண்ணாமலை தடை விதித்துள்ளார். இந்நிலையில் தன் மீதான நடவடிக்கைக்கு காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்துள்ளார். அவர் நான் பாஜகவுக்கு எதிரானவர் என்று கூறினால் அதை என்னால் ஏற்க முடியாது. அப்படி யாராவது சொன்னால் நான் அறைவேன். ஒரு தனி மனிதர் கட்சியாக மாற முடியாது.
எவ்வித விசாரணையும் இன்றி அதிகாரத்தில் இருப்பவர் முடிவெடுத்தால் இப்படித்தான் இருக்கும் என்று கூறியுள்ளார். அதன் பிறகு கட்சியின் நடவடிக்கைகளை நான் ஏற்கிறேன். ஆனால் எனக்கு சாதகமானவர்கள் என்னிடம் பேசுவதை தடுக்கவோ, நான் தேசத்திற்கு ஆதரவாக உழைப்பதை நிறுத்தவோ யாராலும் முடியாது என்று கூறியுள்ளார். மேலும் அண்ணாமலை தன்னை ஆரம்பத்தில் இருந்தே கட்சியை விட்டு வெளியேற்ற முயற்சி செய்து வருவதாக காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அடுத்தடுத்த நாட்களில் அண்ணாமலை பற்றிய பல விவரங்களை காயத்ரி வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அண்ணாமலைக்கு தற்போது பெரிய தலைவலியாக மாறி எதிர்வினையற்ற தொடங்கியுள்ளது.