Categories
மாநில செய்திகள்

பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை…. பெரும் பரபரப்பு….!!!!

மணிப்பூர் மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. கடந்த 28ம் தேதி முதல் கட்டமாக 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மீதம் உள்ள 22 தொகுதிகளுக்கு 2வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 92 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்நிலையில் வாக்குப்பதிவின் போது நடந்த வன்முறையில் பாஜக பிரமுகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இம்பால் நகரில் வாக்குப்பதிவின் போது காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜகவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் பாஜக பிரமுகர் அமுபா சிங் (வயது 25) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு வன்முறை வெடித்துள்ளது.

Categories

Tech |