புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் தொடர் போராட்டம், மத்திய பா.ஜ.க. அரசின் தோல்விக்கு சிறந்த உதாரணம் என உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான திரு. அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஒரு மாதத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். பணக்கார நண்பர்கள் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகள் பலனைடயும் வகையிலும், விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களுக்கு எதிரான வர்த்தகப் பாதையையும் பா.ஜ.க. உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார். விவசாயிகள் போரட்டம் தொடர்ந்து வருவது பா.ஜ.க. அரசின் தோல்விக்கு மிகச்சிறந்த உதாரணமாகியுள்ளதாக திரு. அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.