தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.அதனால் தமிழக அரசு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் முடிவுக்கு முன்பும் பின்பும் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் முடிவு வெளியாகிய பிறகு பாஜக தொண்டர்கள் யாரும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். தொண்டர்கள் தேர்தல் ஆணைய உத்தரவை கடைபிடிக்க வேண்டும். பொதுவெளியில் கூட்டமாக வந்து கொண்டாடவும் வேண்டாம் என கூறியுள்ளார்.