துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில் துணை குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஆகஸ்டு 6ஆம் தேதி நடக்கிறது. இதில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய பாஜகவின் பாராளுமன்ற குழு இன்று கூடியது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக கூட்டணியின் சார்பாக போட்டியிட ஜெகதீப் தங்கர் வார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜெகதீப் தங்கார் தற்போது மேற்கு வங்க ஆளுநராக உள்ளார்.