தமிழகத்தில் பாஜக இல்லை எனில் தமிழக அரசியல் இல்லை என்று பாஜக தலைவர் எல்.முருகன் சூளுரைத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்கிறார்கள், பாஜக இல்லை எனில் தமிழக அரசியலே இல்லை என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சூளுரைத்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் கேஸ் இணைப்புக்காக எம்பி இடம் பரிந்துரை கடிதம் பெற காத்திருக்க வேண்டும். ஆனால் பாஜக ஆட்சி காலத்தில் சமையல் கேஸ் இணைப்பு இலவசமாகவே வழங்கப் பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.