Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக ஆதிக்கம் போச்சு…! மோடிக்கு எதிராக… வலுவான PMவேட்பாளர்… அனல் பறக்கும் தேசிய அரசியல் ..!!

பீகாரில் நடந்துள்ள அரசியல் மாற்றம் பாரதீய ஜனதாவை பொருத்தவரை தேசிய அரசியலில் அவர்களுக்கு பின்னடைவு தான். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்திலிருந்து எத்தனை மக்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா சார்பாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக இருக்கும்.

பாஜக ஆதிக்கம்:

அதிக எண்ணிக்கையிலே பீகார், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து வெற்றி பெற்று தான் சென்ற முறை பாரதிய ஜனதாவும் வலுவான பெரும்பான்மை பெற்றது. அத்தகைய சூழ்நிலை தொடர வேண்டும் என்றால் பீகாரிலே அவர்களுடைய ஆதிக்கம் தொடர்ந்து இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நிதிஷ்குமார் அவர்களை விட்டு விலகி இருக்கிறார்.

பிரதமர் வேட்பாளர்:

நிதீஷ்குமார் கட்சிக்கும் நாடாளுமன்றத்திலே நல்ல எண்ணிக்கையில் எம்பிக்கள்  இருக்கின்றார்கள்.இத்தகைய சூழ்நிலையில், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிதீஷ் குமாரை கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம்,  இடதுசாரி கட்சிகள் ஆகியோர் ஏற்கனவே ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர் மோடி:

ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரான நிதிஷ்குமார்,  பாரதிய ஜனதா கட்சியை நேருக்கு நேராக எதிர்கொள்ள பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பில் களமிறக்கினால் அந்த கூட்டணிக்கு…  பாரதிய ஜனதாவுக்கு எதிரான பிற கட்சிகள் அதாவது…  தேசியவாத காங்கிரஸ், டி ஆர் எஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆதரவளிக்க வாய்ப்பு இருக்கிறது.

வலுவான வேட்பாளர்:

அப்படிப்பட்ட சூழ்நிலையை தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வலுவான வேட்பாளர் யாருமே மக்களவைத் தேர்தலில் இல்லை என்கின்ற சூழல் மாறி,  வலுவான எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தேசிய அளவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்று திரட்டும் முயற்சி எடுபடுமா என்பதை நாம் போக போகத்தான் பார்க்க வேண்டும்.

Categories

Tech |