Categories
மாநில செய்திகள்

பாஜக அடக்கு முறையால் ஸ்டேன் சுவாமி மரணம்…. வைகோ குற்றச்சாட்டு….!!!!

சமூக ஆர்வலரும் பழங்குடிகளுக்காக குரல் கொடுத்தவருமான திருச்சியை சேர்ந்த ஸ்டேன் ஸ்வாமி உடல்நலக் குறைவால் காலமானார். எல்கர் பரிஷத் வழக்கில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுவாமிக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்ட நிலையில், அவர் நேற்று  காலமானார். இவர் ஜார்கண்டில் பழங்குடியின உரிமைக்காக குரல் கொடுத்தவர்.

இந்நிலையில் பாஜக அரசின் கடுமையான அடக்குமுறை காரணமாகவே ஸ்டேன் சுவாமி உயிர் பறிபோய்விட்டது. நடுங்குவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிறை சித்திரவதையால் உடல் நலம் பாதித்து உயிர் இழந்துள்ளார் என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவருக்கு பிணை வழங்க என்ஐஏ எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |