நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகனிடம், அதிமுக அரசின் வருடத்திற்கு 6 சிலிண்டர் திட்டம் சாத்தியமானதா என்ற கேள்விக்கு, திமுக தலைவர் 7 விஷன் டாக்குமென்ட் கொடுத்தாரு. அந்த எழுமே மத்திய அரசாங்கத்தினுடைய திட்டங்களை என்டாஸ் பண்ணி கொடுத்தார். ஸ்மார்ட் சிட்டி… எழில்மிகு நகரங்கள் என்று சொன்னார். ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி நடைமுறைப்படுத்தப்பட்ட இருக்கிறது.
அதே மாதிரி குடிநீர் என்று சொன்னார்…. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 26லட்சம் பேருக்கு ஏற்கனவே இலவசமாக பைப் இணைப்பு கொடுத்தாச்சு. மத்திய அரசால் இன்னும் ஒரு கோடி பேருக்கு கொடுக்கிறதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், மத்திய அரசாங்கம் வீடுகள் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதனை நாங்கள் செய்யப் போகிறோம் என்று செல்கிறார்.
என்னென்ன மத்திய அரசாங்கம் செய்து கொண்டு இருக்கிறதோ…. அதை திமுக நாங்க செய்யப் போகிறோம் என சொல்கிறது. கேஸ் கொடுப்பதும் மத்திய அரசாங்கத்தினுடைய திட்டம். இதை நாங்க கொடுக்கப்போறோம் சொல்லுறாரு. பாரதிய ஜனதா கட்சி நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தேசிய அளவில் எந்தவித ஊழலுக்கும் இடம் கொடுக்காமல் தூய்மையான அரசை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
எங்களுடைய நோக்கம் ஊழலற்ற ஆட்சி, அதை நாங்கள் கொடுப்போம் என எல்.முருகன் தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கை மிகவும் பிரபலமாக பேசப்பட்ட நிலையில் அது மத்திய அரசின் திட்டங்கள் என தெரிந்தது திமுக தொண்டர்களை வாயடைக்க வைத்துள்ளது.