நேரு குடும்பத்தினருக்கு சொந்தமான அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்தியா மற்றும் சீனா இடையேயான லடாக் எல்லையில் மோதல் முண்ட பிறகு மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு பதிலடியாக ராஜீவ்காந்தி பவுண்டேஷனுக்கு சீன தூதரகம் மூலம் நிதி கிடைத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பல்வேறு அமைச்சக அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
ராஜீவ்காந்தி பவுண்டேஷன், ராஜீவ்காந்தி அறக்கட்டளை மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளைக்கு கிடைத்த வெளிநாட்டு நிதி மற்றும் நன்கொடை தொடர்பாக இந்த குழு விசாரணை நடத்த உள்ளது. வருமான வரிச்சட்டம், சட்டவிரோத பணபரிமாற்றம் தடுப்புச் சட்டம் போன்றவை மூலம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் அதிர்ந்து போயுள்ளது.