Categories
அரசியல்

பாஜகவுக்கு லட்சம் கோடிகளில் நிதி குவிவது எப்படி….? தமிழருவி மணியன் விளக்கம்…. அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்….!!!!!!!!!

திமுக, அதிமுக என அரை நூற்றாண்டுக்கும் மேலாக மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வரும் இரு திராவிட கட்சிகளையும் ஆட்சி கட்டிலில் இருந்து நிரந்தரமாக தூக்கி எறிய வேண்டும் என ஒற்றை நோக்கத்துடன் காந்திய மக்கள் இயக்கம் ஆரம்பித்து அரசியலுக்கு வந்தவர் தமிழருவி மணியன். இவர் ஆரம்பத்தில் விஜயகாந்தை தூக்கி  பிடித்தவர் முடிவில் ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்து அதில் அவரது ரசிகர்களை போலவே தமக்கும் ஏமாற்றமே மிஞ்சியதால் அரசியல் துறவம் பூணுவதாக சில ஆண்டுகளுக்கு முன் பகிரங்கமாக அறிவித்து இருந்தார். அரசியல் துறவறம் மேற்கொள்வதாக அறிவித்த இவர் திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை காந்தி மக்கள் இயக்கத்தை காமராஜர் மக்கள் இயக்கமாக மாற்றிக்கொண்டு தமிழக அரசியலில் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கின்றார்.

பிரபல நாளிதழ் ஒன்றின் யூ டியூப் சேனலுக்கு அண்மையில் அவர் பேட்டி அளித்துள்ளார். அப்போது விஜயகாந்த் வைகோ திராவிட கட்சிகள் போன்ற பல்வேறு விஷயங்களை அவர் பேசியிருக்கின்றார். அதிலும் குறிப்பாக பாஜகவிற்கு எப்படி லட்சம் கோடி கணக்கில் நிதி குவிக்கின்றது. பாஜக உண்மையில் ஊழல் செய்யாத கட்சியாய் இருப்பதை பற்றி அவர் விளக்கம் அளித்து தங்களையே அதிர்ச்சி அடைய வைத்திருப்பதாக குமுறுகின்றனர் தமிழருவியின்  ஆதரவாளர்கள். இந்தியாவில் தொடங்கும் கார்ப்பரேட் பன்னாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தொழில்வரி உட்பட்ட பல்வேறு வரி சலுகைகளை மத்திய பாஜக அரசு அவற்றிற்கு அளித்து வருகின்றது. இதன் பயனாக வரிசலுகையாக  மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் கிடைத்து வருகின்றது.

இதற்கு நன்றி கடனாக தனியார் நிறுவனங்கள் பாஜகவிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை கட்சி நிதி அளித்து வருகின்றது. கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் நிதியை நன்கொடையாக பாஜக பெற்றுக் கொள்கிறது. கட்சி நடத்த தேவையான பணம் இந்த வழியில் கிடைத்து விடுவதால் அவர்கள் ஆட்சி நிர்வாகத்தில் ஊழல் புரிய வேண்டிய அவசியம் இல்லை. இதன் காரணமாகவே பாஜகவிற்கு ஊழல் புரியாத கட்சி என்ற இமேஜ் மக்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கிறது என பாஜகவிற்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து குவியும் கட்சி நிதி பற்றி அசத்தலான விளக்கம் அளித்துள்ளார் தமிழருவி. இப்படி கார்ப்பரேட்டர்களிடமிருந்து லட்சம் கோடிகளில் கட்சி நிதியை நன்கொடையாக வாங்குவது மறைமுகமாக லஞ்சம் பெறுவது போன்றது தானே? கட்சி நடத்துவதற்காக பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கைநீட்டி காசு வாங்குவதால் தங்களது பணியாளர்களை அந்த நிறுவனம் தொழிலாளர் நல சட்டங்களுக்கு முற்றிலும் எதிராக நடத்தினால் அதனை எப்படி ஒரு அரசால் தட்டிக் கேட்க முடியும். கட்சி நிதிக்காக தவறிழைக்கும்  ஒரு தனியார் நிறுவனங்களை தட்டிக் கேட்கும்.தார்மீக உரிமையை ஒரு அரசு இழந்துவிட்டால் பிறகு எப்படி அது மக்கள் நலன் சார்ந்த அரசாக இருக்க முடியும்.

மேலும் லட்சம் கோடிகளில் கட்சி நிதி தரும்  கார்ப்பரேட்டுகள் அதற்கு கைமாறாக  உட்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசாங்கத்தின் பல்வேறு மெகா திட்டங்களை செயல்படுத்தும் வாய்ப்பை எளிதாக பெற்று விடுகின்றது. இதனால் தொழில் முனைவோராக முயலும் பல்லாயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்களின் கனவு நனவாகாமலேயே போய்விடுகின்றது. இப்படி இளம் தொழில் முனைவோருக்கு கிடைக்க வேண்டிய பணி வாய்ப்புகளை கார்ப்பரேட்டுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தாரை வார்ப்பது நம் தேசத்து இளைஞர்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் அல்லவா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றனர் அவரது ஆதரவாளர்கள். இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஒரே பதிலாய் இந்திய அளவிலும் சரி மாநில அளவிலும் சரி அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், காண்ட்ராக்டர்கள், கிரிமினல்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், முதலாளிகள் இவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து தான் அரசாங்கத்தை நடத்துகின்றனர் என ரத்தின சுருககமாய் விளக்கம் அளித்துள்ளார் தமிழருவி மணியன்.

Categories

Tech |