தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் பாஜக கட்சியில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது கர்நாடக இசைக் கலைஞரும் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளருமான மோகன் வைத்தயா பாஜக கட்சியில் இணைந்துள்ளார். தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் முன்னிலையில் மோகன் வைத்யா பாஜகவில் இணைந்தார்.
இதேபோன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகை வனிதா பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தான் அரசியலுக்கு வரும்போது கூறுவதாக அவர் தரப்பில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியது. பிரபலங்கள் பலர் பாஜகவில் இணைவதால் தமிழக பாஜக கட்சி வலுப்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.