அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டது. இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா என ஒவ்வொருவரும் தலைமையிலும் தனித்தனியாக அணிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் அதிருப்தியடைந்த அந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது அதிமுகவில் முக்கியத் தலைவராக இருந்த நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
இவர் மீது ஜெ.. மிகவும் நன்மதிப்பு வைத்திருந்தார். இதனால், கடந்த சில தினங்களாக இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் ஒன்றிணைய வேண்டும் என்று குரல் கொடுத்த வந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.