Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர்…? வெளியான பரபரப்பு தகவல்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ள நிலையில்  அது உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஜெ.,வின் நம்பிக்கையை பெற்ற இவர், 2011 – 2016 வரை வருவாய்த்துறை அமைச்சராக இருந்தார். 2016 தேர்தலில் வெற்றி பெற்றாலும், அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. 2021இல் தேர்தலில் போட்டியிட கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.  2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்தவர் தோப்பு வெங்கடாசலம்.  2021ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பும் வழங்கப்படவில்லை.

இதனால், பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். ஆனால், திமுக கரை வேட்டியை கட்டாமலும், தனது காரில் திமுக கொடியை கட்டாமலும் இருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில், திமுகவில் இருந்து விலகி பாஜகவில் தோப்பு வெங்கடாசலம் இணையப் போவதாக தகவல் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தோப்பு வெங்கடாசலம், தற்போது வரை திமுகவில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |