Categories
மாநில செய்திகள்

பாஜகவிற்கு 60 சீட்டா?… வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் 60 தொகுதிகளில் அதிமுகவிடம் பாஜக கேட்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியினருக்கும் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுப்பதுதான் தொகுதி என்று இருந்த காலம் மலையேறி விட்டது. ஒரு பக்கம் பாமக உள் இட ஒதுக்கீட்டை கையிலெடுத்து தனிக் கச்சேரி நடத்த, எங்களுக்கு 41 தொகுதிகள் கொடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி என்று தேமுதிக சொல்கிறது. இந்நிலையில் அதிமுகவிடம் பாஜக 60 தொகுதிகள் கேட்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தில் உறுதியான நிலை எடுத்து அதிமுக தனது தலைமையை உறுதிப்படுத்துமா அல்லது குனிந்து போகுமா என்பது விரைவில் தெரியவரும்.

Categories

Tech |