தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் மேற்கு வங்கம் இந்தியாவை காப்பாற்றியுள்ளது என்ற தன் கட்சியின் வெற்றியை வர்ணித்துள்ளார் மம்தா பானர்ஜி. 200க்கும் அதிகமான இடங்களை வெல்வோம் என்று கொந்தளித்த பாஜகவை வங்கம் காலி செய்துவிட்டது. இது வங்கத்தின் வெற்றி! ஜனநாயகத்தின் வெற்றி!என்று அவர் மேலும் தனது வெற்றி செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 115 இடங்களில் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.