Categories
மாநில செய்திகள்

“பாஜகவினரே என்னை தூக்கி எறிந்துள்ளனர்”…. காயத்ரி ரகுராம் டுவிட்….!!!!

தமிழ்நாட்டில் பா.ஜ.க மாநில நிர்வாகிகளின் புது பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்து தமிழக பாஜக டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள், மாநில அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள் எனவும் தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் எனவும் அண்ணாமலை தெரிவித்தார். தமிழக பாஜக நிர்வாகிகளின் புது பட்டியலில் பொதுச்செயலாளராக விருப்பம் தெரிவித்து இருந்த நயினார் நாகேந்திரனுக்கு, துணைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டு சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஒருவருக்கு ஒருபதவி எனும் அடிப்படையில் நயினார் நாகேந்திரனிடமிருந்து துணைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.

அதேபோன்று துணைத்தலைவரில் இருந்து பொதுச்செயலாளராக பதவி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த வி.பி.துரைசாமி அதே பொறுப்பில் நீடிக்கிறார். பொதுச்செயலாளராகயிருந்த கரு.நாகராஜனுக்கு துணைத் தலைவர் பதவி மாற்றி வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கே.பி.ராமலிங்கம், அ.தி.மு.க முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் போன்றோரும் மாநிலத் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டனர்.

அத்துடன் ஏற்கனவே பதவி நீக்கம் செய்யப்பட்டு மீண்டுமாக கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவராகயிருந்த காயத்ரி ரகுராம் மீண்டுமாக நீக்கம் செய்யப்பட்டு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டார். அதனைதொடர்ந்து காயத்ரி ரகுராமனுக்கு வேறுபதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் பாஜகவில் தான் வகித்து வந்த பதவி பறிபோன சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியே என் ஒரே தலைவர் என்று காயத்ரி ரகுராம் தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் “சொந்த கட்சியினர் சிலர் என்னை அவமதித்து தூக்கி எறிந்துள்ளனர். நான் அதை என் தலையை உயர்த்தி எதிர்கொள்வேன்” என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் டுவிட் செய்துள்ளார். எனினும் பாஜகவுக்கும், நாட்டிற்கும் முழுமனதுடன் தொடர்ந்து உழைப்பதாக உறுதியளித்து இருக்கிறார். பாஜகவில் காயத்ரி ரகுராம் வகித்து வந்த பதவி பறிக்கப்பட்டதில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் செய்து வருகிறார்.

Categories

Tech |