Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்ஸ் ஆபிஸ்: கலகத் தலைவன் மீது காதல் தொடர்கிறது!…. வெளியான டுவிட் பதிவு….!!!!

டம், மீகாமன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் “கலகத் தலைவன்”. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து இருக்கிறார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் ஆரவ், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் கடந்த 2 நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியாகியது. தற்போது இப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தின் கதைகளத்தை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் பாக்ஸ் ஆபிஸில் கலகத் தலைவன் மீது காதல் தொடர்கிறது என்று தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |