கேரளாவில் நட்சத்திர ஆமையை கடத்தி விற்பனை செய்ய முயன்ற கணவன், மனைவியை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இடுக்கி மாவட்டம் மறையூர் வனப்பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்ற முருகன் , கவிதா இணையர், அங்கு அறிய வகை பெண் நட்சத்திர ஆமை யை கண்டு எடுத்துள்ளனர் . பின்னர் அதனை எடுத்து வந்து தங்களது வீட்டில் மறைத்து வைத்து இருந்ததாக தெரிகிறது . இதையடுத்து நட்சத்திர ஆமையை விற்பனை செய்ய பலரிடமும் ஆலோசனை கேட்டு வந்தனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து , முருகன் வீட்டிற்கு விரைந்த வனத்துறையினர், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நட்சத்திர ஆமையை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆமையை கடத்தி விற்க முயன்ற தம்பதிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.