Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நிஜ மகளை பாத்திருக்கீங்களா…? எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க…!!!

ஒரு இல்லத்தரசியின் கதையாக விஜய் டிவியில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் ஒளிபரப்பாகிறது. படிக்காத ஒரு பெண்ணாக வரும் பாக்கியலட்சுமியின் போராட்டங்களும், அவர் சாதிக்க நினைக்கும் விஷயங்களும் பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. இதில் பாக்கியலட்சுமிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் இளைய மகன் எழில் அம்மா மீது எப்போது பாசமாக இருப்பார். அம்மா செய்யும் சமையல் தொழிலுக்கு இவர் தான் உறுதுணையாக இருப்பார். மருமகள் ஜெனியும் மாமியார் பாக்கியா மீது அன்பாக இருக்கிறார். இப்படி ஒரு மாமியார் வேண்டும் என்று தமிழ்நாட்டுப் பெண்கள் சொல்லும் அளவிற்கு இவருடைய கேரக்டர் ரீச் ஆகி உள்ளது.

பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பாக்கியலட்சுமி சீரியலில் காட்டப்பட்டு வருகிறது. இந்த சீரியலுக்கு பெண் ரசிகர்கள் ஏராளமாக உள்ளார்கள். சீரியலில் நாயகியாக பாக்கியா கேரக்டரில் நடிக்கும் சுசித்ரா கன்னட படத்தின் மூலம் அறிமுகமாகி கன்னடம், தெலுங்கு மொழிகளில் பல தொடர்களில் நடித்துள்ளார். இவர் சூட்டிங் ஸ்பாட்டில் டப்ஸ்மாஷ் எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் சுசித்ரா தற்போது தனது நிஜமகளுடன் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் லைக் செய்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Categories

Tech |