பெங்காலி சீரியலின் ரீமேக் ஆக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த தொடர்தான் பாக்கியலட்சுமி. சுசித்ரா, சதீஷ், ரேஷ்மா என பல பேர் முக்கியமான வேடத்தில் நடிக்கும் இத்தொடர் தொடக்கத்தில் சாதாரண வரவேற்பை பெற்றாலும், தற்போது ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது தொடரில் பாக்கியா கணவனை பற்றி தெரிந்துகொண்டு, தற்போது தன் வழியில் பயணித்து வருகிறார். இதற்கிடையில் கோபி அவர் விரும்பியது போல ராதிகாவை திருமணம் செய்யவுள்ளார்.
இவர்களது திருமணத்தில் என்ன நடக்கப்போகிறது? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையில் கோபியின் அப்பா நான் உயிருடன் இருக்கும்வரை திருமணம் நடக்காது என ஒரு பக்கம் மண்டபத்தை தேட, கோபி நிச்சயம் ராதிகாவை மணந்தே தீருவேன் என உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் படப் பிடிப்பு தளத்திலிருந்து ராதிகாவின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அவற்றில் அவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது போல் தெரிகிறது. இருப்பினும் பாக்கியலட்சுமி சீரியலில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.