விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. அந்த சீரியலில் அம்ரிதா ரோலில் நடித்துவரும் நடிகை ரித்திகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் முக்கியமான பொறுப்பிலுள்ள வினு என்பவரைதான் அவர் திருமணம் செய்யவுள்ளார்.
அவர்கள் திருமண வரவேற்பு வருகிற நவம்பர் 27ஆம் தேதி மாலை நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக குடும்பத்தினர் முன்னிலையில் அவர்கள் இருவரது திருமணமும் நடைபெறும். இதில் வினு விஜய் டிவியில் கிரியேட்டிவ் டிரைக்டர் ஆக பணிபுரிந்து வருகிறாராம். ரித்திகாவும் விஜய் டி.வி சீரியலில் தான் நடித்து வருகிறார் என்பதால் இது காதல் திருமணமாகதான் இருக்கும் என்று தெரிகிறது.