Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து திடீரென விலகியது ஏன்?… நடிகை ஜெனிபர் விளக்கம்…!!!

நடிகை ஜெனிபர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிகை சுசித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சதீஷ்குமார், விஷால், ரித்திகா, நேஹா மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது 250 எபிசோடுகளை கடந்து இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபர் விலகினார்.

Baakiyalakshmi - Watch Episode 174 - Radhika Gets Suspicious on Disney+  Hotstar

அவருக்கு பதிலாக பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான ரேஷ்மா அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஜெனிபர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார். அதில் ராதிகா கதாபாத்திரம் இனிவரும் காலங்களில் நெகட்டிவாக மாறும் என்பதாலும், சில தனிப்பட்ட காரணங்களாலும் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |