நாடு முழுவதும் கொரோனாரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு ஊரடங்கு விதித்து கட்டுப்பாடுகள் அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். கொரோனா வைரஸிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே.
அதனால் இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் ஜனவரி 16-ம் நாளில் தொடங்கியது. அதே நாளில் அந்தமானிலும் தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது. அங்குள்ள 38 தீவுகளில் மொத்தம் 4,38,000 பேர் குடியிருக்கின்றனர். மேலும் கடல்கடந்த தீவுகள், அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள், சீரற்ற வானிலை ஆகியவற்றுக்கு இடையில் கடும் சவால்களை எதிர்கொண்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு இலக்கை அடைந்ததாக தீவு நிர்வாகம் தெரிவித்துள்ளது.