Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பாகுபலி’ பாணியில் பிரபாஸ் படத்தை இயக்க ரெடியாகும் பிரசாந்த் நீல்… வெளியான செம மாஸ் தகவல்…!!!

இயக்குனர் பிரசாந்த் நீல் ‘சலார்’ படத்திற்குப் பிறகு மீண்டும் பிரபாஸை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் சலார் படத்தை கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Prabhas wraps up first schedule of Prashanth Neel's Salaar. Details here -  Movies News

இந்நிலையில் சலார் படத்திற்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் மீண்டும் நடிகர் பிரபாஸுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ள இந்த படத்தை பாகுபலி பாணியில் மிக பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |