Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் வெள்ள நிவாரண நிதியில் ஊழல்… வெளியான தகவல்… கடுங் கோபத்தில் பிரபல நாடு…!!!!!

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 1,700 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12,800 பேர் காயமடைந்து இருக்கின்றனர். இது தவிர 20 லட்சம் வீடுகள் சேதுமடைந்தோ அல்லது முற்றிலும் அழிந்தோ இருக்கிறது மேலும் 79 லட்சம் பேர் வீடுகளை விட்டு புலம்பெயர்ந்து சென்றிருக்கின்றனர். 5.98 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர் 25,100 பள்ளிகள் சேதம் அடைந்துள்ளது. 7000 பள்ளிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா  வெள்ள நிவாரணம் மற்றும் மனிதநேய உதவி என்னும் அடிப்படையில் 4,600 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது.

இது மட்டுமல்லாமல் உணவு பாதுகாப்பு உதவியாக 82 கோடி வழங்கி உள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தான் வெள்ள நிவாரண நிதிக்கு அளித்த தொகையில் ஊழல் நடந்திருப்பது என வெளியான தகவல் அமெரிக்காவை ஆத்திரமடைய செய்திருக்கின்றது. மேலும் இது பற்றி அமெரிக்க  வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைசிடம் நிரூபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்து பேசிய அவர் இதனை நாங்கள் தீவிர கவனத்தில் கொண்டிருக்கின்றோம் பாகிஸ்தானில் மட்டுமில்லாமல் உலகின் எந்த பகுதியிலும் மனித நேயம் சார்ந்த அவசர சுழலில் அமெரிக்காவின் வரி செலுத்துவோரின் பணம் பயன்படுத்தப்படுகிறது.

அதனால் தொடர்ந்து நிதி சரியாக நிர்வகிப்பது மக்களை சென்று சேர்வது போன்ற பல்வேறு காரணிகளை கண்காணிக்க அமெரிக்க குழு உள்ளூர் அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றும் என தெரிவித்த அவர் இந்த குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் வெள்ளம் பாதித்த சிந்து மற்றும் பலூசீஸ்தான் மாகாணங்களில் உள்ள பத்திற்கும் கூடுதலான மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்து இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |