Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாகிஸ்தான் வெற்றிக்கு தகுதியானவர்கள்…. தோல்விக்கு பின் கேப்டன் வில்லியம்சன் வேதனை..!!

பாகிஸ்தான  வெற்றிக்கு தகுதியானவர்கள் என்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்..

8ஆவது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முதல் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன்(46) மற்றும் டேரில் மிட்செல் (53) இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள்  இழந்து 152 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான அணியின் பாபர் அசாம் (53) மற்றும் முகமது ரிஸ்வான் (57) தொடக்க ஜோடி அதிரடி ஆட்டத்தால் 19 .1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 153 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் தோல்விக்கு பின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேசியதாவது, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஓவர்களில் டேரில் மிட்செலின் அதிரடி ஆட்டத்தால் நல்ல நிலையில் பேட்டிங்கை முடித்தோம். இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிட்ச் என்பதால் இந்த ஸ்கோர் போதுமானதாக இருக்கும் என்று தான் கணித்தோம். ஆனால் எங்களது கணிப்பு தவறாகிவிட்டது. பாகிஸ்தான அணி சுலபமாக இலக்கை துரத்தி வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ள கடினமாக இருக்கிறது. எனினும் அவர்கள் சிறப்பாக பேட்டிங் ஆடினர். அந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் தான் என்று தெரிவித்தார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அணிகளைக் கொண்ட குரூப் 1 இல் நியூசிலாந்து சிறப்பாகச் செயல்பட்டது. மறுபுறம், தென்னாப்பிரிக்கா நெதர்லாந்திடம் இருந்து வெளியேறிய பிறகுதான் பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

Categories

Tech |