Categories
தேசிய செய்திகள்

”பாகிஸ்தான் வாழ்க” இளம் பெண்ணுக்கு நக்சலைட்டுக்களுடன் தொடர்பு – எடியூரப்பா

கர்நாடகாவில் பாகிஸ்தான் வாழ்க என இளம்பெண்ணை அமுல்யாவுக்கு நக்சலைட் உடன் தொடர்பு இருப்பதாக முதலமைச்சர் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் AIMIM கட்சித் தலைவர் ஓவைசி தலைமையில் நடைபெற்ற CAA எதிர்ப்புப் போராட்டத்தில் அமுல்யா என்ற இளம்பெண் பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கம் எழுப்பினார். இதனால் மேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஒவைஸி இளம் பெண் அமுல்யாவுக்கும் , AIMIM கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார்.

இதற்கிடையே இளம்பெண் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடியூரப்பா இளம் பெண் அமுல்யாவுக்கு நக்சலைட் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். அமுல்யாவின் அப்பாவே அவரை கைவிட்டு விட்டதாக குறிப்பிட்ட எடியூரப்பா அமுல்யாவுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையே கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் உள்ள அமுல்யாவின் வீட்டை மர்ம நபர்கள் சூறையாடி உள்ளனர். ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கர்நாடக காவல்துறையினர் அமுல்யாவின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

Categories

Tech |