தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை உட்பட பல இடங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை தமிழகம் முழுவதும் 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூரில் 1 இடத்திலும், திருச்சியில் 11 இடத்திலும், சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, கேம்ப் ரோடு, சேலையூர், பல்லாவரம், குரோம்பேட்டை, மண்ணடி போன்ற இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் இந்தியாவில் தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக NIA அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
எனவே ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்களை குறி வைத்து சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக சாதிக் பாஷா மற்றும் அவருடைய கூட்டாளிகள் இருக்கும் இடங்களில் சோதனையானது தீவிர படுத்தப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்துவது தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவதாகவும், துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பதாகவும் மற்றொரு தகவலும் கிடைத்துள்ளது. மேலும் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதோடு, ஆயுதங்களை சப்ளை செய்பவர்களையும் தேடி வருகின்றனர்.