Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் ஆதரவு யூடியூப் சேனல்கள் முடக்கம்…. அதிரடி காட்டிய மத்திய அரசு….!!!!

பாகிஸ்தானிலிருந்து இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்தியாவில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்திலும், செயல்பட்ட 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. அந்த யூடியூப் சேனல்களில் விவசாயிகள் போராட்டம், காஷ்மீர் விவகாரம், அயோத்தி, ஜெனரல் பிபின் ராவத் மறைவு போன்ற பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராக அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை பரப்பியது தெரியவந்தது. அதன்பின்னர் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் செயலர் அபூர்வ சந்திரா இதுகுறித்து யூடியூப் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில் யூடியூப் சேனல்கள் இந்திய இறையாண்மை எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்த விசாரணையின் அடிப்படையில், அந்த யூடியூப் சேனல்கள் மற்றும் சில வெப்சைட்டுகளை உடனடியாக முடக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி ரகசியமான இந்த நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக தற்போது தேச விரோத நடவடிக்கைகளுக்கு காரணமாக இருந்த 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 வெப்சைட்டுகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் புதிதாக கொண்டு வரப்பட்டிருக்கும் 2021 தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் சிறப்பு அதிகாரத்தை கொண்டு இந்த முடக்க நடவடிக்கை முதல் முறையாக எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் புலனாய்வு அமைப்புகளின் ரகசிய விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இந்த யூடியூப் சேனல்களில் இந்தியாவுக்கு எதிராக தேவையில்லாத வதந்திகளை பரப்புவது, தேசியப் பாதுகாப்பில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது என தெரியவந்துள்ளது. முடக்கப்பட்ட 20 யூடியூப் சேனல்களில் 15 சேனல்கள் நயா பாகிஸ்தான் எனும் இயக்கத்துக்கு சொந்தமானவை. The naked truth, 48 news, junaid Halim official உள்ளிட்ட சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன 3.5 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் கொண்ட ஒரு முடக்கப்பட்ட சேனலில் இருந்த தேச விரோதமான வீடியோக்களின் மொத்த பார்வைகள் 500 மில்லியனாக இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் விவசாயிகள் போராட்டத்தினை தவறான பாதையில் திசை திருப்பும் வகையிலான கண்டெண்டுகள் இந்த சேனல்கள் மூலம் பரப்பப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |