Categories
உலகசெய்திகள்

“பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது”… மந்திரி வெளியிட்ட தகவல்…!!!!!!

பாகிஸ்தானில் தென்மேற்கு பருவ மழை கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்கும் இடம் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வருகின்றார்கள். பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்திற்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றன என தேசிய பேரிடர் ஆணையம் கூறியுள்ளது. நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து மீட்பு பணிகளை அரசு துரிதப்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் அந்த நாட்டில் தொடர்ந்து மீட்பு நிவாரண மற்றும் மறு குடியமர்த்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் விளைவாக பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கி இருப்பதாக அந்த நாட்டின் பருவநிலை மாற்ற துறை மந்திரி ஷெர்ரி ரஹ்மான் கூறியுள்ளளார். மேலும் வெள்ளம் ஒரு பெரிய கடல் போல பரவி இருப்பதாகவும் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு கூட வறண்ட நிலம் இல்லை என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |