Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பெருவாரியான மக்களின் சராசரி வருமானம் ரூ.600 க்கும் குறைவு…!!! திடுக்கிட வைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகையில் 34 சதவிகிதம் பேர் ரூபாய் 588க்கும் கீழான வருமானத்தில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் மக்கள் உணவு பொருட்கள் மற்றும் எரி பொருட்களுக்கு மட்டுமே தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை செலவிட வேண்டி உள்ளது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் தெற்காசியாவில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது பாகிஸ்தான் தான் எனவும் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு அந்நாட்டு மக்களை கடுமையாக பாதித்துள்ளது எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 12.9 பில்லியன் டாலர் ஆகும், இந்த நிதியாண்டில் அது 18.5 பில்லியன் டாலராக இருக்கும். அதுமட்டுமில்லாமல் நடப்பு நிதியாண்டில் பாகிஸ்தானுக்கு 35 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வெளிநாட்டு நிதி தேவைப்படுகிறது. 2022-23 நிதியாண்டில் பாகிஸ்தானின் பணவீக்கம் சராசரியாக 12.7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |