சொகுசு பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது..
செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் அருகே கனரக லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்தில் 2 பேர் பலியாகினர். சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சசாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து 45 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு புறப்பட்ட சொகுசு பேருந்து, படாலம் அடுத்த அத்தினம்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த கனரக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.