மகாராஷ்டிரா மாநிலம் வகோலி என்கிற இடத்தில யோகித்தா சதவ் என்ற பெண் ஒருவர் பேருந்து ஓட்டுனர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவரே அந்த பேருந்தை இயக்கி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
சுற்றுலா பேருந்து ஓட்டுநர் ஒருவர் மொராச்சி சின்சோலி என்கிற இடத்திற்கு பெண் பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொண்டு சுற்றுலா அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தடுமாற்றம் அடைந்து அவர் ஒரு கட்டத்திற்கு மேல் மயங்கி விழும் நிலைக்கு சென்று விட்டார். பெண் பயணி ஒருவர் பேருந்தை நிறுத்தும்படி கேட்டார். ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியவுடன் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது.
இதை கண்ட பெண் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஓட்டுனரின் நிலைமை மிகவும் மோசமாகிக்கொண்டே வந்ததால். பெண் பயணிகளில் ஒருவரான யோகித்தா சதவ் என்பவர் திடீரென்று பேருந்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்து ஓட்ட ஆரம்பித்தார். ஆனால் மீண்டும் அந்த டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் வேகத்துடன் செயல்பட அந்தப்பெண் சாமர்த்தியமாக பேருந்தை செலுத்தி அந்த டிரைவரை மருத்துவமனையில் அனுமதித்தார். பெண் பயணியின் விவேகமான செயலை பார்த்த பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.