Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பஸ்சை தூக்க முயற்சி…. விழுந்து விழுந்து சிரித்த பயணிகள்… ஆபாசமாக பேசிய குடிமகன்…!!

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் போதையில்  ஒருவர்  சுமார் 2 மணி நேரம் பஸ் பயணிகளை அலற விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூரில்  உள்ள பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை ஓருவர்  குடித்துவிட்டு பாட்டு பாடி ஆடிக் கொண்டிருந்தார். அப்போது பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் இவர் செய்வதை பார்த்து சிரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்  பஸ்ஸை தூக்க முயற்சித்தார். இதனை கிண்டல் செய்யும் பயணிகளை ஆபாச வார்த்தையால் பேசியுள்ளார். இதனால் மக்கள் அங்கிருந்து போய் உள்ளனர். இந்த போதை ஆசாமி சுமார் 2 மணி நேரம் பயணிகளை அலற விட்டசம்பவம் பழைய பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பழைய பஸ் நிலையத்தை ஒட்டியே மதுக்கடை அமைந்துள்ளது. இதனால் மாலை நேரங்களில் பலர் குடித்து விட்டு பஸ்நிலையத்தில் விழுந்து கிடப்பது பயணிகளுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறது.இ தனால் பெரும் போக்குவரத்து நெரிசல்  ஏற்படுகிறது என்று பயணிகள் கூறியுள்ளனர்..

Categories

Tech |