Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பவளபாறையில் இருந்து செய்யப்பட்ட பொருள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

பவளப்பாறை மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி அழிந்து வரும் இனப்பட்டியலில் இருக்கும் பவள பாறையில் இருந்து பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை கடத்தி சிலர் விற்பனை செய்வதாக தமிழக தலைமை செயலாளருக்கு புகார் வந்தது. அவரின் அறிவுறுத்தலின்படி கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் இது குறித்த நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி கோவை பேரூர் காளம்பாளையம் பகுதியில் இருக்கும் சாம்சன் என்பவர் கடையில் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது தடை செய்யப்பட்ட 4 பவளப்பாறைகள், அதன் மூலம் செய்யப்பட்ட 2 மாலைகள் ஆகியவை இருந்தது தெரியவந்தது. சர்வதேச அளவில் இந்த பவள பாறைகள் கிராம் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பவளப்பாறைகள் மற்றும் மாலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சாம்சனை கைது செய்து பவளப்பாறை விற்பனையில் யாருக்கெல்லாம் தொடர்ந்து இருக்கிறது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |