Categories
தேசிய செய்திகள்

“பழைய ஷூவாவது கொடுங்க…!” மாற்றுத்திறனாளி வீரர்களின் அவல நிலை…!!

விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரை அனைத்து தரப்பு விளையாட்டு வீரர்களும் ஒரே மாதிரி தங்கள் வாழ்க்கையை நகர்த்துவது இல்லை. அதிலும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் தங்களின் இலக்கை அடைவதற்கு செய்யக்கூடிய முயற்சி சற்று கடினமானதுதான். இதுகுறித்து மாற்றுத்திறனாளி விளையாட்டு சங்கத்தின் அலுவலகப் பொறுப்பாளர் கூறியதாவது, “எங்களின் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு சில அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது கூட கடினமானதாக இருக்கிறது.

தற்போது அவர்களுக்கு ‘ஷூ பேங்க்’ அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். அதற்காக மக்கள் தாங்கள் பழைய ஷூக்களை அவர்களுக்கு நன்கொடையாக வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம் அல்லது ஒரு ஜோடி புது ஷுக்களை வாங்கி அவர்களுக்கு பரிசாக அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.” என அவர் கூறினார். பார்வையற்ற விளையாட்டு வீரர்கள் பலர் ஒலிம்பிக் வரை சென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள நிலையில் அவர்கள் பழைய கூட தானமாக பெறும் நிலையில்தான் உள்ளனர் என்பது சற்றே வருத்தம் அளிக்க கூடிய ஒன்றுதான்.

Categories

Tech |