Categories
தேசிய செய்திகள்

பழைய வாகனங்கள் வச்சுறீங்களா…? உங்களுக்கான அதிர்ச்சி தகவல்…!!!

15 ஆண்டுகளுக்கு மேலாக வாகனங்களின் பதிவை புதுப்பித்தலுக்காண புதுப்பித்தல் கட்டணத்தை 21 மடங்கு உயர்த்தி இருப்பது வாகனம் வைத்திருப்பவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருதி பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதற்காக 15 ஆண்டுகள் கடந்த வாகனங்களுக்கான பதிவை புதுப்பித்து தர சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. இந்த நடைமுறை அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி மோட்டார்சைக்கிள்கள் பதிவு கட்டணம் 300 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும், மூன்று சக்கர வாகனங்களுக்கான கட்டணம் 500 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாகவும், கார் மற்றும் ஆட்டோ கட்டணம் 500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும், வாகனங்களுக்கான கட்டணம் 5,000 ரூபாயில் இருந்து 40 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் அனைத்து வாகன ஓட்டிகளுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 ஆண்டுகளை கடந்த மோட்டார் சைக்கிளுக்கு தகுதி சான்றிதழ் கட்டணம் 500 ரூபாய் உடன் பதிவு கட்டணம் 1000 ரூபாய் செலுத்தவேண்டும். ஆட்டோவுக்கு தகுதி சான்றிதழ் கட்டணமாக ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனுடன் புதுப்பிப்பு கட்டணம் 3500 செலுத்த வேண்டும். வாடகை கார்களுக்கு தகுதி சான்றிதழ் கட்டணம் ஆயிரம் ரூபாயும், புதுப்பிப்பு கட்டணம் 7,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனங்கள் உரிய காலத்தில் தகுதி சான்றிதழ் பெறத் தவறினால் மாதம்தோறும் 300 முதல் 500 ரூபாயை அபராதமாக கட்ட வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Categories

Tech |