அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை அரசு புது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பழைய அழிப்புக் கொள்கை பற்றிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் பேசியிருந்தார். அதன்படி 15 ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தக வாகனங்கள் மற்றும் இருபது ஆண்டுகளுக்கு பழமையான தனிநபர் வாகனங்களை பரிசோதிக்க தகுதி சோதனை கட்டாயமாக்கப்பட்டது . மேலும் அந்த வாகனங்களில் தரமற்ற வாகனங்கள் கண்டறியப்பட்டு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் தனிநபர் வாகனங்களும், பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வர்த்தக ரீதியிலான பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களையும் நீக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் செயல்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பழைய வாகனங்களை தானாகவே வந்து அழிக்க முன்வரும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வாகனத்தில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் 4.5 லட்சம் கோடியில் இருந்து பத்து லட்சம் கோடி உயர்வு வரும் என்று அவர் தெரிவித்தார். வாகனத் துறையில் 10 கோடிக்கு மேல் முதலீடும், 50,000 அளவில் வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் எட்டு ஆண்டுகள் பழமையான போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கப்படும் போது சாலையின் 10 முதல் 25 சதவீத விகிதத்தில் பசுமை வரி வசூலிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர் மாநிலங்களுக்கு ஆலோசனைகள் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிக்க முடியாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.