பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான புதிய விதிமுறைகள் குறித்து அறிவிப்பு வெளியாகயுள்ளது.
இந்தியா முழுவதும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களை நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பட்ஜெட் கூட்டத் தொடரின் போது அறிவித்தார். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சிவில் சர்வீஸ் விதிகள் விரைவில் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஓய்வூதிய விதிகள், பங்களிப்பு விதிகள், மருத்துவ வருகை போன்றவற்றில் திருத்தங்களுக்கான முன் மொழிவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலமாக 2004 ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் அமர்ந்த அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை பெறுவதற்கு தகுதியானவர்கள் எனவும், மருத்துவ வசதிகளை பெற முடியும் எனவும் அறிவிப்பு வெளியாகிவுள்ளது. மேலும் ஒரே மாதிரியான பதவிக்கு தேவையான ஆட்களை எடுப்பதற்கான தேர்வு நடைபெறும். இந்த தேர்வு கிராம வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள் போன்ற பதவிகளுக்கு நடத்தப்படும்.