Categories
தேசிய செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம் எதிரொலி!…. வரி செலுத்துவோருக்கு சிக்கல்…. வெளியான ஷாக் தகவல்….!!!!

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளா்களுக்குரிய முழு ஓய்வூதிய தொகையையும் அரசே செலுத்திவந்தது. அந்த திட்டத்தை ரத்துசெய்து, புதிய ஓய்வூதியத் திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதத்தை பணியாளா்கள் ஓய்வூதியத்துக்கான பங்களிப்பாக செலுத்தவேண்டும். அரசு சாா்பாக 14 % செலுத்தப்படும். கடந்த 2004ம் வருடம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அரசு பணியில் இணைந்த பணியாளா்களுக்குப் புது ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விடவும் புது திட்டத்தில் பணியாளா்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியத் தொகையானது குறைவாகவே இருக்கிறது. இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டுமாக நடைமுறைபடுத்த வேண்டும் என பல மாநிலங்களை சோ்ந்த அரசு பணியாளா்கள் குரல் எழுப்பி வருகின்றனா். அரசியல் நோக்கத்திற்காக அதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட எதிா்க் கட்சிகள், தாங்கள் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டமானது நடைமுறைபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நீதி ஆயோக் துணைத் தலைவா் சுமன் பெரி செய்தியாளா்களிடம் கூறியதாவது, “சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முயல்வது கவலையளிக்கிறது. ஏனெனில் அதனால் ஏற்படும் நிதிச்சுமை எதிா் காலத்தில் வரிசெலுத்துவோரின் தலையிலேயே விழும். இப்போது வரி செலுத்துவோருக்கு பாதிப்பு நிகழாது. இந்தியாவை வளா்ச்சி அடைந்த நாடாக மாற்றவேண்டுமென்ற நீண்டகால இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம். ஆகவே அந்த இலக்கை அடைவதற்கு அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து ஆதரவளிக்கவேண்டும்.

அரசால் இப்போது அறிவிக்கப்படும் திட்டங்கள், எதிா் காலத்தில் நிதிச் சுமையை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும். எதிா்கால மக்களின் நலனைக் காக்கும் வகையில் தற்போதைய அரசுகள் செயல்படவேண்டும். நாட்டின் வளா்ச்சியை அதிகரிப்பதற்கு தனியாா்துறை முதலீடு அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். உக்ரைன்-ரஷ்யா போா் காரணமாக உரத்துறையும் பெட்ரோலியத் துறையும் பாதிக்கப்பட்டு உள்ளது. சா்வதேச அசாதாரண சூழல் காரணமாகவே வட்டி விகிதங்களை உயா்த்தவேண்டிய கட்டாயம் இந்திய ரிசா்வ் வங்கிக்கு (ஆா்பிஐ) ஏற்பட்டது” என்று கூறினார்.

Categories

Tech |