மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள கெங்குசெட்டிபட்டி பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் வயர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சிவலிங்கம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் இருக்கும் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சிவலிங்கம் கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். சிறிது நேரத்தில் சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சிவலிங்கத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.