ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன், ரஷ்யாவின் மாஸ்க்வா கப்பலை ஏவுகணை தாக்குதல் நடத்தி மூழ்கடித்ததாக அறிவித்துள்ளது.
இதற்கு அடுத்த மறுநாளே உக்ரைனின் தலைநகரான கீவ்வில் ரஷ்யா பயங்கர தாக்குதலை முன்னெடுத்துள்ளது. மேலும் அந்நாட்டில் உள்ள ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத உற்பத்தி ஆலைகளை ரஷ்யா குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் இதுவரை இல்லாத அளவிற்கு மிக கடுமையாக இருந்ததாக கூறப்படுகிறது.