மத்தியப்பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் தலைமையகத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் ஒட்டிக்கொண்டிருக்கும் அஜ்னல் ஆற்றில் ஒரு மனிதனின் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்தை காவல்துறையினர் செல்வதற்கு முன்பே ஆற்றில் உடல் மிதக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் அந்த உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். அப்போது முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் சக்தாபூர் கிராமத்தைச் சேர்ந்த திரிலோக்சந்த்(55) என தெரியவந்தது. மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது.
இதில் திரிலோக்சந்த் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், அப்பெண்ணின் தந்தையும் தாய் மாமாவும் திரிலோக்சந்தை சனிக்கிழமையன்று மோட்டார் சைக்கிளில் அஜ்னல் ஆற்றுக்கு அழைத்துச் சென்றதும் தெரியவந்தது. அதன்பின் ஆற்றங்கரையில் வைத்து திரிலோக்சந்தை தலையை துண்டித்து மீன் வெட்டும் கருவியால் உடலை 2 பகுதிகளாக வெட்டி உள்ளனர். அதனை தொடர்ந்து உடலை ஆற்றில் வீசிவிட்டு கிளம்பியதும் தெரியவந்துள்ளது. தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு யாருக்காவது கொலையில் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். திரிலோக்சந்தும் கைது செய்யப்பட்ட் இருவரும் உறவினர்கள் என்பதால் அவர்கள் அழைத்ததும் ஆற்றங்கரைக்கு சென்றுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.